
தெற்கு மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், வெள்ளிக்கிழமை இரவு பைகுல்லாவில் உள்ள மகத காலனி பகுதியில் சச்சின் குர்மி(43) வெள்ளிக்கிழமை இரவு உணவிற்குப் பிறகு நடந்து செல்வதற்காக தனது வீட்டை விட்டு வெளியேறியபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கூர்மையான ஆயுதங்களால் அவரைத் தாக்கினர்.
இந்த சம்பவம் நள்ளிரவு 12:30 மணியளவில் நடந்தது. உடனே தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த சச்சினை மீட்டு அருகிலுள்ள ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனார் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
சச்சின் குர்மியைத் தாக்கியது யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு அல்லது மூன்று பேர் தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண போலீஸார் தீவிர விசாரணை மேற்கொடு வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் 8 தனிப்படைகளை அமைத்துள்ளனர். இது தவிர, குற்றப்பிரிவின் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்த வழக்கில் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாரதிய நீதி சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.