
புதுதில்லி: தலைநகர் தில்லியில் சனிக்கிழமையன்று அதிகபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவ கால சராசரியை விட ஒரு டிகிரி அதிகமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே வேளையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி அதிகரித்து 23.2 டிகிரி செல்சியஸாக உள்ளது.
காற்றில் ஈரப்பதம் 83 முதல் 50 சதவிகிதம் வரை உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மாலை 4 மணியளவில் காற்றின் தரக் குறியீடு எண் 126 பதிவானால் இது மிதமான பிரிவில் உள்ளது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.