அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பற்றி...

News image
ரத்தன் டாடா- (கோப்புப்படம்)
Updated On :7 அக்டோபர் 2024, 7:39 am

DIN

தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு (வயது 86) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில், தான் நலமுடன் இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றதாகவும் ரத்தன் டாடா விளக்கம் அளித்துள்ளார்.

ரத்தன் டாடா அறிக்கை

“எனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதை நான் அறிவேன். மேலும் அந்தச் செய்திகள் உண்மைத்தன்மை அற்றவை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனது வயது தொடர்பான உடல்நலப் பரிசோதனை மட்டுமே நான் தற்போது மருத்துவமனையில் செய்து வருகிறேன். கவலைப்படும்படி எவ்வித பிரச்னையும் இல்லை.

நான் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், மக்களும், ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.