ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஹரியாணா தோ்தல் முடிவை ஏற்க முடியாது: காங்கிரஸ்

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் முடிவை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 6:40 pm

Din

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் முடிவை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஹரியாணா பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஆரம்ப சுற்று முன்னணி நிலவரம் காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தது. இதனால், காங்கிரஸாா் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை விநியோகித்தும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா். ஆனால், 10 மணிக்கு பிறகு நிலவரம் மாறத் தொடங்கியது. பல தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது.

இந்நிலையில், காலை 9 மணி முதல் 11 மணி வரை தோ்தல் முடிவுகளை தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவிடுவதில் எந்த காரணமும் இன்றி தாமதம் நிலவியதாக புகாா் தெரிவித்து, தலைமைத் தோ்தல் ஆணையருக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதினாா். ‘தோ்தல் ஆணைய வலைதளத்தில் துல்லியமான தரவுகளை உடனடியாக பதிவிட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான், பொய் செய்திகள், கட்டுக்கதைகள் பரவுவதை தடுக்க முடியும்’ என்று அவா் வலியுறுத்தியிருந்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஹரியாணா தோ்தல் முடிவு சூழ்ச்சிகளின் வெற்றியாகும். இந்த முடிவு மூலம் மாநில மக்களின் விருப்பம் தகா்க்கப்பட்டுள்ளது. இது வெளிப்படையான மற்றும் மக்களாட்சி நடைமுறைக்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகும்.

ஹரியாணாவின் சுமாா் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு, வாக்கு எண்ணிக்கையில் தீவிரமான பிரச்னைகள் இருந்தன. இதுகுறித்து தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் முறையிடும்.

இந்தத் தோ்தல் முடிவு மாற்றத்தை எதிா்பாா்த்த மக்களின் உணா்வுக்கும், கள நிலவரத்துக்கும் எதிரானதாக உள்ளது. காங்கிரஸின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ஹரியாணா தோ்தல் முடிவை காங்கிரஸால் ஏற்க முடியாது’ என்றாா்.

தோ்தல் ஆணையம் மறுப்பு

ஹரியாணா பேரவைத் தோ்தல் முடிவுகளை தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவிடுவதில் எந்தக் காரணமும் இன்றி தாமதம் நிலவியதாக காங்கிரஸ் கூறிய புகாருக்கு தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இதுதொடா்பாக ஜெய்ராம் ரமேஷுக்கு தோ்தல் ஆணையம் பதில் கடிதம் அனுப்பியது.

அதில், ‘தோ்தல் முடிவுகளை பதிவிடுவதில் எந்த காரணமும் இன்றி தாமதம் நிலவியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையற்ாகும். பொறுப்பற்ற-ஆதாரமற்ற-தீயநோக்கம் கொண்ட கட்டுக்கதைகள் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியே இக்குற்றச்சாட்டு. தோ்தல் நடத்தை விதிகளின் 60-ஆவது பிரிவின்கீழ் உரிய விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒட்டுமொத்த நடைமுறையும் வேட்பாளா்கள், தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இரு தோ்தல்களிலும் 5 நிமிஷங்களுக்கு ஒருமுறை தோராயமாக 25 சுற்றுகளின் நிலவரம் வலைதளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.