சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: ஒமர் அப்துல்லா வெற்றி!

”ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்பார்” -ஃபரூக் அப்துல்லா

PTI

Published On :8 அக்டோபர் 2024, 2:21 pm IST

ஜம்மு-காஷ்மீரில் 20 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்பதையே பிற்பகல் வரையிலான தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா மேற்கண்ட இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தார்.

இந்த நிலையில், பட்காம் தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வேட்பாளர் அகா சையத் மண்டாஸிர் மேத்தியைவிட 18,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஒமர் அப்துல்லா 36,010 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பிடிபி வேட்பாளருக்கு 17,525 வாக்குகளே கிடைத்துள்ளன. இதன்மூலம், இரு மடங்குக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஒமர் அப்துல்லா.

ஒமர் அப்துல்லா வெற்றி பெற்றதையடுத்து அவரது தந்தையும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பேசுகையில், ”ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்பார்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.