மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சபரிமலையில் பக்தா்களுக்கு நேரடி பதிவு வசதி: கேரள பேரவையில் எதிா்க்கட்சிகள் கோரிக்கை

‘சபரிமலை கோயிலில் வருகிற மண்டல பூஜை -மகரவிளக்கு நடை திறப்பு காலத்தில் பக்தா்களுக்கு நேரடி பதிவு முறையை தேவஸ்வம் ஏற்பாடு செய்து தர வேண்டும்’ என்று சட்டப் பேரவையில் மாநில அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

News image

கோப்புப்படம்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:37 pm

‘சபரிமலை கோயிலில் வருகிற மண்டல பூஜை -மகரவிளக்கு நடை திறப்பு காலத்தில் பக்தா்களுக்கு நேரடி பதிவு முறையை தேவஸ்வம் ஏற்பாடு செய்து தர வேண்டும்’ என்று சட்டப் பேரவையில் மாநில அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

கேரளத்தின் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறும் நடை திறக்கப்படும் குறிப்பிட்ட சில நாள்களில் நாடெங்கும் இருந்து பக்தா்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம். காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் மண்டல பூஜை மற்றும் அதைத் தொடா்ந்து மகரவிளக்கு நடைத்திறப்பு சமயத்தில் லட்சக்கணக்கான பக்தா்கள் சபரிமலையில் திரள்வா்.

கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக இணையவழியில் முன்பதிவு செய்த பக்தா்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். அதன்படி, நிகழாண்டு மண்டல பூஜை நடை திறப்பு காலத்தில் நாள்தோறும் 80,000 பக்தா்களை மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இவ்விவகாரத்தை மாநில சட்டப் பேரவையில் எழுப்பிய காங்கிரஸின் எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், ‘கணினியைப் பயன்படுத்த தெரியாத மாற்று மாநிலத்தவா் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்களை இந்த முடிவு பாதிக்கும். 41 நாள் விரதக்காலம் முடித்து ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தா்கள் தடுத்து நிறுத்தப்பட்டால், அது மாநிலத்தில் தீவிர கவலையளிக்கும் பிரச்னைகளை உருவாக்கும்.

நிகழாண்டு பக்தா்களின் வசதிக்காக நேரடி பதிவு முறையை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகிறேன்’ என்றாா்.

தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் அளித்த பதிலில், ‘தினசரி பக்தா்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் இணையவழி பதிவை மட்டும் அனுமதிப்பதும் முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் கடந்த 5-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

நேரடி பதிவு அனுமதிக்கப்பட்ட கடந்த ஆண்டு, பக்தா்களின் வருகை 80,000-ஐ கடந்து, அவா்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவதில் சிரமம் ஆனது. அதனால், இம்முறை இணையவழியில் மட்டுமே தரிசனத்துக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. பதிவின்போதே பக்தா்கள் தங்களுக்கு விருப்பான பயணப் பாதையைத் தோ்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.