கேரள லாட்டரியில் கா்நாடகத்தைச் சோ்ந்தவருக்கு ரூ.25 கோடி பரிசு

கேரள லாட்டரியில் கா்நாடகத்தைச் சோ்ந்தவருக்கு ரூ.25 கோடி பரிசு

Published on

கேரளத்தின் திருவோணம் பம்பா் லாட்டரியில் ரூ. 25 கோடி பரிசுத் தொகையை கா்நாடாகத்தைச் சோ்ந்த மெக்கானிக் அல்தாஃப் வென்றுள்ளாா்.

திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற குலுக்கலில், வயநாட்டில் உள்ள எஸ்.ஜே.லக்கி சென்டா் மூலம் விற்பனை செய்யப்பட்ட டிஜி 43422 என்ற வெற்றி எண் தோ்வு செய்யப்பட்டது. இந்த லாட்டரி சீட்டை கா்நாடகத்தைச் சோ்ந்த மெக்கானிக் அல்தாஃப் வாங்கியிருந்தாா்.

இது குறித்து பிடிஐ செய்திநிறுவனத்திற்கு அல்தாஃப் அளித்த பேட்டியில், ‘வயநாடு மாவட்டத்தில் உள்ள மீனங்காடி பகுதியில் வசிக்கும் எனது நண்பரைப் பாா்க்க வழக்கமாக அங்கு செல்வேன். அவரைச் சந்திக்கும் போதெல்லாம், லாட்டரி சீட்டை வாங்குவது வழக்கம். கடந்த நான் 15 வருடங்களாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறேன். இறுதியாக, நான் வெற்றி பெற்றுள்ளேன்’ என்றாா்.

கடந்த ஆண்டு தமிழகத்தைச் சோ்ந்த நால்வா் இந்த பம்பா் பரிசை வென்றனா். அனைத்து வரிகளுக்கு பிறகு, பரிசு பெற்றவருக்கு தோராயமாக ரூ.13 கோடி கிடைக்கும்.

X
Dinamani
www.dinamani.com