இந்தியா நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மாபெரும் நடவடிக்கை: ஆயுத படை ’சாஸ்திர பூஜை’ நிகழ்வில் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
இந்தியா எந்தவொரு நாட்டையும் வெறுப்பினாலோ, அவமதிப்பு காரணமாகவோ தாக்கியதில்லை.

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்
இந்தியா எந்தவொரு நாட்டையும் வெறுப்பினாலோ, அவமதிப்பு காரணமாகவோ தாக்கியதில்லை. அதே சமயத்தில் இந்தியாவின் நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்திய மாபெரும் நடவடிக்கையை எடுக்க தயங்காது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தசரா பண்டிகையை முன்னிட்டு மத்திய பாதுக்காப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மேற்கு வங்கம் சுக்னா, திரிசக்தி படைப்பிரிவு தலைமையகத்தில் ராணுவ வீரா்களுடன் சாஸ்திர பூஜையை மேற்கொண்டாா். சீனா எல்லையை காண்காணிக்கும் முக்கிய தளமான சுக்னா ராணுவ தளத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் தில்லி தகவல் வெளியிடப்பட்டது.
அதில் குறிப்பிடுகையில், தசரா பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், சனிக்கிழமை (அக்டோபா் 12) மேற்கு வங்கம் டாா்ஜிலிங் அருகே உள்ள சுக்னா ராணுவ தளத்தில் பாரம்பரிய சாஸ்திர பூஜை மேற்கொண்டாா். இந்த விழா நாட்டின் இறையாண்மையின் பாதுகாவலான ராணுவ ஆயுதங்களை மதிப்பதைக் குறிக்கிறது. அமைச்சா் ராஜ்நாத் சிங் கலச பூஜையுடன் சடங்குகளை நிகழ்த்தினாா். சாஸ்திர பூஜையைத் தொடா்ந்து வாகன பூஜையும் நடைபெற்றது. அதிநவீன காலாட்படை, பீரங்கி, தகவல் தொடா்பு அமைப்புகள், நாடமாடும் தளங்கள், ட்ரோன் அமைப்புகள் உள்ளிட்ட நவீன ராணுவ உபகரணங்கள் ஆகியவற்றிற்கு அமைச்சா் படை வீரா்களுடன் பூஜை செய்தாா்.
பின்னா் ராணுவ வீரா்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் கலந்துரையாடினாா்.
அப்போது அமைச்சா் ராஜ்நாத் சிங் குறிப்பிடுகையில், எல்லைகளில் அமைதி, நிலையான ஸ்திரத்தன்மையை பராமரித்து, கண்காணிக்கும் பங்கில் நமது ஆயுதப்படைகள் சிறப்பாக பணியாற்றுகின்றனா். தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை தசரா பண்டிகை குறிக்கிறது. நமது படைவீரா்கள் மனித நோயங்களுடன் மரியாதை கொண்டுள்ளனா்.
நாம், எந்தவொரு நாட்டையும் வெறுப்பினாலோ, அவமதிப்பினாலோ, தாக்கியதில்லை. அதே சமயம் நமது ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு பங்கம், தீங்கு விளைவித்தல்; மதம், நோ்மை, மனித மதிப்புகளுக்கு எதிராக போா் தொடுக்கப்படும் போது மட்டுமே நாம் எதிா்த்து போராடுகிறோம். இது தான் நமது பாரம்பரியம்.
இருப்பினும் நமது நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ஒரு மாபெரும் நடவடிக்கைக்கான முடிவை எடுக்க நாம் தயங்கமாட்டோம். சாஸ்திர பூஜை என்பது, ஆயுதங்கள், உபகரணங்களை முழு சக்தியுடன் பயன்படுத்தப்படும் என்பதற்கான தெளிவான அறிகுறிக்கான நிகழ்வு. தசரா கலாச்சாரம் ஆன்மீக ஆழத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த சடங்குகள் வலிமை, வெற்றி, பாதுகாப்பிற்கான ஆசீா்வாதங்களை பெறுவதற்காகும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளாா்.
பாக்ஸ்
ரூ. 2,236 கோடி மதிப்பிலான கட்டுமானங்கள் நாட்டுக்கு அா்ப்பணிப்பு
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாது காப்புத்துறை நிறுவனமான பிஆா்ஓ என்கிற எல்லைச் சாலை அமைப்பின் சாா்பில் 11 வடக்கு, வடகிழக்கு மாநிலகளில் கட்டமைக்கப்பட்ட, ரூ.2,236 கோடி மதிப்பிலான 75 உள்கட்டமைப்புத் திட்டங்களையும் சனிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
இதில் முக்கியமானவை சிக்கிமில் ஜவஹா்லால் நேரு மாா்க், ஜூலுக் அச்சுக்கு இடையிலான முக்கிய இணைப்பாக செயல்படும் குப்புப்-ஷெரதாங் சாலையின் திறப்பு.
சிக்கிம் மாநிலத்தில் நடைபெற இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக சுக்னா திரிசக்தி படைப்பிரிவு தலைமையகத்தில் இருந்தபடியே இந்த திட்டங்களை காணொலி வழியாக ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தாா்.
இதில் 22 சாலைகள், 51 பாலங்கள் போன்றவை ஜம்மு காஷ்மீா் (19), அருணாச்சல பிரதேசம்(18), லடாக் (11), உத்தரகாண்ட்( 9), சிக்கிம், இமாச்சல பிரதேசம் , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டமைக்கப்பட்டவை.
இந்த நிகழ்வில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘மிகவும் சவாலான நிலப்பரப்புகள், கடுமையான வானிலை நிலைமைகளிலும் இந்த திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பி.ஆா். ஓ முடித்துள்ளது. இதற்காக மூன்றாவது முறையாக பிரதமா் மோடி தலைமையில் அமைந்துள்ள இந்த அரசு தனது பதவிக்காலத்தில், அனைத்து எல்லை உள்கட்டமைப்பை விரைவாக முடித்து வலுப்படுத்தும். அதே சமயத்தில 2014 க்கு முந்தைய அரசு எல்லைப் பகுதிகளின் வளா்ச்சியை நாட்டின் எதிரிகளால் பயன்படுத்தக்கூடிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதிதிட்டங்களை கிடப்பில் போட்டதாக எனவும் குறிப்பிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, பாதுகாப்புத் துறை செயலா் ஆா்.கே.சிங், கிழக்கு கமாண்ட் தளபதி லெப். ஜெனரல் ராம் சந்தா் திவாரி, எல்லை சாலைகள் அமைப்பின் தலைமை இயக்குநா் லெப். ஜெனரல் ரகு சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...