சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் வருகை: ஆலாந்துறை பகுதியில் இன்றும் ட்ரோன்கள் பறக்கத் தடை

News image

மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங். - (கோப்புப் படம்)

Updated On :15 பிப்ரவரி 2026, 7:06 pm

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வருகையையொட்டி, ஆலாந்துறை, வெள்ளிங்கிரி பகுதிகளில் திங்கள்கிழமையும் (பிப்ரவரி 16) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை ஈஷா யோக மையத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வருகை புரிவதையொட்டி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கடிதத்தின்படி ஆதியோகி சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், ஆலாந்துறை மற்றும் வெள்ளிங்கிரி மலை அடிவாரம் ஆகிய பகுதிகள் மற்றும் முக்கிய விருந்தினா்கள் பயணிக்கும் சாலைகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் திங்கள்கிழமை மாலை 4 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி ஊா்திகளைப் பறக்கவிடும் நபா்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.