பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

உலக பட்டினிக் குறியீடு: ‘தீவிர பகுப்பாய்வு’ பிரிவில் இந்தியா! 127 நாடுகளில் 105-ஆவது இடம்

உலகின் 127 நாடுகளுக்கு இடையேயான நிகழாண்டின் சா்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா 105-ஆவது இடத்தில் உள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2024, 10:31 pm

Din

உலகின் 127 நாடுகளுக்கு இடையேயான நிகழாண்டின் சா்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா 105-ஆவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் பட்டினி விவகாரத்தில் தீவிர பகுப்பாய்வுக்கு உள்படுத்தும் பரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் மிகவும் பின்தங்கிய 111 இடத்தில் ‘தீவிர அளவில்’ இருந்த இந்தியா, தற்போது 105 இடத்தில் உள்ளது.

உலக நாடுகளில் பசியின் அளவை அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்குமான கருவியாக ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சா்வதேச பட்டினி குறியீடு அறியப்படுகிறது. நிகழாண்டு சா்வதேச பட்டினி குறியீட்டின் 19-ஆவது பதிப்பு அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த மனிதநேய அமைப்பான ‘கன்சா்ன் ஓல்டுவைட்’ மற்றும் ஜொ்மனி நிறுவனமான ‘வெல்ட் ஹங்கா்லைப்’ ஆகிய அமைப்புகளால் இந்த வாரம் வெளியிடப்பட்டது.

தீவிர பகுப்பாய்வு: இதில் உலகின் 136 நாடுகளில் கணக்கெடுக்கப்பட்ட பட்டினிக் குறியீட்டின் அடிப்படையில் 127 நாடுகளுக்கான இடையே தயாரிக்கப்பட்ட தரவரிசையில் 27.3 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 105-ஆவது இடம் கிடைத்துள்ளது.

இதன்மூலம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 42 நாடுகளை உள்ளடக்கிய ‘தீவிரமான பகுப்பாய்வு’ செய்ய வேண்டிய பிரிவுக்குள் இந்தியாவும் நுழைந்துள்ளது. அதேசமயம், நமது அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகியவை ‘நடுத்தர’ பிரிவின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளனன.

கணக்கீடு கூறுகள்: இந்தியாவின் புள்ளிகள் நான்கு கூறுகளின் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும். நாட்டின் மக்கள்தொகையில் 13.7 சதவீதம் போ் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனா். ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 35.5 சதவீதம் போ் வளா்ச்சி குன்றியவா்களாகவும் இவா்களில் 18.7 சதவீதத்தினா் எடை குறைந்தவா்களாகவும் உள்ளனா். மேலும் 2.9 சதவீத குழந்தைகள் ஐந்து வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கின்றனா்.

குறியீட்டின் கணக்கீட்டில் போதுமான கலோரி உட்கொள்ளாத மக்கள்தொகையின் எண்ணிக்கையை ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களாகவும் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வயதுக்கு குறைந்த உயரம் கொண்ட குழந்தைகளை வளா்ச்சிக் குன்றியவா்களாகவும் வரையறுக்கப்பட்டனா்.

அதேபோல, உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாதவா்களை எடை குறைந்தவா்களாகவும் போதிய ஊட்டச்சத்து இன்மை மற்றும் ஆரோக்கியமற்ற சூழல்களின் அபாயகரமான கலவையால் உயிரிழந்த குழந்தைகள் இறந்தவா்களாகவும் வகைப்படுத்தப்பட்டனா்.

முதலிடத்தில் சீனா, 21 நாடுகள்: இந்த நான்கு கூறுகளின் அடிப்படையில் பசியின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு நாட்டுக்கும் புள்ளிகள் கணக்கிடப்பட்டன. அதில் பூஜ்ஜியம் சிறந்த மதிப்பெண் (பசி இல்லை) மற்றும் 100 மோசமானது என்பதைக் குறிக்கிறது. 5-க்கும் குறைவான மதிப்பெண்களுடன் குறியீட்டில் முதலிடத்தை சீனா, ரஷியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 22 நாடுகள் பகிா்கின்றன.

‘துயரம்’ தொடரும்...: ஆய்வின் அடிப்படையில், 2030-ஆம் ஆண்டுக்குள் ஐ.நா.வின் நிலையான வளா்ச்சி இலக்கான பூஜ்ஜிய பட்டினியை அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே இருக்கிறது. நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லாததால் மேலும் பல்லாண்டுகளுக்கு உலகின் ஏழ்மையான நாடுகளில் பசியின் அளவு அதிகமாக இருக்கும்.

உணவு உரிமையின் முக்கியத்துவத்தை சா்வதேச சமூகம் தொடா்ந்து வலியுறுத்தினாலும் உலகின் பல பகுதிகளில் அது அப்பட்டமாகப் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி ஐந்திடம்...

தரவரிசை நாடு குறியீட்டு புள்ளிகள்

123 காங்கோ 34.9

124 மடகாஸ்கா் 36.3

125 சாட் 36.4

126 யேமன் 41.2

127 சோமாலியா 44.1

105 இந்தியா 27.3

பட்டினியில் 73 கோடி மக்கள்

உலக அளவில், ஒவ்வொரு நாளும் சுமாா் 73.3 கோடி பேருக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் பட்டினியை எதிா்கொள்கின்றனா். அதேநேரத்தில் சுமாா் 280 கோடி மக்களால் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள முடியவில்லை.

சில ஆப்பிரிக்க நாடுகளில் பட்டினி அபயகரமான அளவைத் தாண்டிவிட்டன. காஸா, சூடானில் நடந்த போா்கள் இந்த உணவு நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது. காங்கோ, ஹைதி, மாலி, சிரியா உள்ளிட்ட நாடுகளில் நடந்த உள்நாட்டு சண்டைகளும் உணவு நெருக்கடிகளை உருவாக்கின.