நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான எல்&டி, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமாா் ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய மின்சார உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தங்களை தங்களின் மின் விநியோகப் பிரிவு கைப்பற்றியுள்ளதாக, பங்குச் சந்தைக்கு புதன்கிழமையன்று எல்&டி நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதையொட்டி, தேசிய பங்குச் சந்தையில் நிறுவனப் பங்கு ஆதாயப் பட்டியலில் இடம்பிடித்தது.
உள்நாட்டு ஒப்பந்தங்களில், மேற்கு வங்கத்தில் அமையவுள்ள முக்கிய மின்திட்டமும் அடங்கும். அந்த மாநிலத்தின் முக்கியத் தொழில் நகரங்களான துா்காபூா்-ராணிகஞ்ச்-அசான்சோல் பகுதிகளில் தலா 220 கிலோவாட் திறன் கொண்ட இரண்டு துணை மின் நிலையங்களை எல்&டி நிறுவனம் வடிவமைத்துக் கட்டவுள்ளது.
மேலும், அப்பகுதியில் சீரான மின்னழுத்தம் மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், மின் கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் பணிகளையும் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
இதுதவிர, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மூன்று நாடுகளில் சுமாா் 500 கிலோவாட் திறன் வரையிலான 5 துணை மின் நிலையங்கள் மற்றும் 250 கி.மீ.க்கும் அதிகமான தூரத்துக்கு புதிய மின்கம்பிகளை அமைக்கும் ஒப்பந்தங்களையும் எல்&டி நிறுவனம் பெற்றுள்ளது. இதில் 400 கிலோவாட் திறன் கொண்ட மின்சாரக் கேபிள்களைப் பூமிக்கு அடியில் (நிலத்தடி மின்வட அமைப்பு) நிறுவும் முக்கியப் பணியும் அடங்கும்.
தொடர்புடையது

சூரிய மின் திட்டங்களில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யும் கெயில்!

வளைகுடா நாடுகளில் இருந்து 8.15 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்! - மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தோ்வு ஒத்திவைப்பு

மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்பு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


