மும்பை: 14 மாடிக் கட்டடத்தில் தீ; 3 பேர் பலி!
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி...


மும்பையில் உள்ள 14 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் புதன்கிழமை காலை 3 பேர் உயிரிழந்தனர்.
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ரியா பேலஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் உள்ள வீட்டில், புதன்கிழமை காலை 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வீரர்கள், ஒரு மணிநேரம் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.
இந்த விபத்தில், படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர்கள் உயிரிழந்ததாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...