
இந்தியா - கனடா விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் பவன் கேரா தெரிவித்தார்.
அரசுடன் இணைந்து ஒரே குரலில் குரல் கொடுக்க வேண்டும் என்றும், எந்தவொரு நாடும் இதுபோன்ற குற்றச்சாட்டை இந்தியா மீது முன்வைக்கத் துணிந்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியத் தூதருக்கு தொடர்பிருப்பதாக கனடா குற்றம்சாட்டியிருந்த நிலையில், கனடாவுக்கான தூதரை இந்தியா திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தது.
எங்கள் தூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய கனடா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கனடாவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் எனவும் இந்தியா குறிப்பிட்டிருந்தது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியத் தூதருக்கு தொடர்பிருப்பதாக கனடா கூறியதற்கு இந்தியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | அஸ்ஸாமில் ரயில் தடம்புரண்டு விபத்து!
இந்நிலையில், இந்தியா - கனடா இடையிலான விவகாரம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பவன் கேரா,
இந்தியா மீது இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்க வேறு எந்த நாடும் துணிந்ததில்லை. முன்னெப்போதுமில்லாத குற்றச்சாட்டு இது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாது. மற்ற நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு எனும்போது எதிர்க்கட்சிகளும் இணைந்து மத்திய அரசின் குரலாக ஒலிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவரிப்பதன்மூலம் எதிர்க்கட்சியை இணைத்துக்கொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.