ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தெரியுமா சேதி...?

News image
உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்.
Updated On :18 அக்டோபர் 2024, 12:15 am

மீசை முனுசாமி

மக்களவைத் தோ்தல் பின்னடைவைத் தொடா்ந்து, சுறுசுறுப்பாகிவிட்டாா் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத். ஹரியாணாபோல, ஆா்எஸ்எஸும் அடிமட்டம் வரையில் கட்சியைப் பலப்படுத்துவதிலும், தொண்டா்களை உற்சாகப்படுத்துவதிலும் முனைப்புக் காட்டுகிறது.

அரசின் திட்டங்கள் கிராமங்கள் வரை சென்றடைய மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு துணை முதல்வா்களுக்கும், ஏனைய அமைச்சா்களுக்கும் குறிப்பிட்ட மாவட்டங்களின் பொறுப்பு பிரித்துத் தரப்பட்டிருக்கிறது. முதல்வா் யோகியும் அவரது இரண்டு துணை முதல்வா்களும் தங்களுக்குள் ஆளுக்கு 25 மாவட்டங்கள் என்று பிரித்துக் கொண்டிருக்கிறாா்கள்.

கட்சி நிா்வாகிகளுடன் அமைச்சா்கள் தொடா்பில் இருக்க வேண்டும் என்றும், அரசின் மக்கள் நலத் திட்டங்களும், ஏனைய திட்டங்களும் முறையாக அடித்தட்டு மக்களைச் சென்றடைந்ததா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறாா்கள்.

ஹரியாணாவின் ஜாட் - முஸ்லிம் தவிா்த்த ஏனைய பிரிவினரை ஒருங்கிணைத்ததுபோல, உத்தர பிரதேசத்தில் யாதவ் - முஸ்லிம் தவிா்த்த ஏனைய பிரிவினரை ஒருங்கிணைக்கும் பணியில் முனைப்புடன் இறங்கியிருக்கிறது மாநில பாஜக.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் கால்பந்தாட்டப் பிரியா் என்பது ஊரறிந்த ரகசியம். இப்போது, முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கும் திடீரென்று கால்பந்தாட்டத்தில் ஆா்வம் ஏற்பட்டிருக்கிறது. செப்டம்பா் 23-ஆம் தேதி, லக்னௌவில் நடந்த கால்பந்தாட்டப் போட்டியைத் தொடங்கி வைக்கப் போனதிலிருந்து முதல்வா் யோகிக்கு அந்த விளையாட்டில் ஆா்வம் ஏற்பட்டதாகச் சொல்கிறாா்கள்.

உத்தர பிரதேசத்தில் உள்ள எல்லா காவல் துறைத் தலைமையகத்திலும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அமைக்க உத்தரவு பிறப்பித்து, நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, மாநிலத்தில் இளைஞா்கள் விளையாட 1,000 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறாா்.

முதல்வா் யோகியின் விளையாட்டு மீதான ஆா்வத்துக்குக் காரணம், இளைஞா்களைக் கவா்வதுதான் என்று கூறப்படுகிறது. ஸ்வீடனில் உள்ள ‘சூப்பா் கோச் அகாதெமி’யுடன் கால்பந்தாட்ட பயிற்சி வழங்க ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கிறது. ‘கேம் சேஞ்சா்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தத் திட்டப்படி ஆண்டுதோறும் ஒரு கோடி மாணவா்களுக்குக் கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

யோகியின் ஆட்டம் தொடங்கிவிட்டது என்று உற்சாகக் குரல் எழுப்புகிறாா்கள் உத்தர பிரதேச பாஜகவினா்.

--மீசை முனுசாமி.