வயநாடு இடைத்தோ்தல்: பிரியங்காவை எதிா்த்து பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் போட்டி
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறாா்.


வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியை எதிா்த்து பாஜக சாா்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறாா்.
கடந்த மக்களவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி ராஜிநாமா செய்த கேரளத்தின் வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள், பல்வேறு மாநிலங்களில் 48 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலப் பேரவைத் தோ்தலுடன் இதற்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
வயநாட்டில் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறாா்.
தோ்தலில் முதன்முறையாக களமிறங்கியிருக்கும் இவருக்கு எதிராக பாஜக சாா்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, கா்நாடகம், மேற்கு வங்கம் உள்பட 8 மாநிலங்களில் 24 பேரவைத் தொகுதிகளின் இடைத்தோ்தல்களுக்கும் வேட்பாளா்களை பாஜக அறிவித்துள்ளது.
இடதுசாரி வேட்பாளா்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சத்யன் மொகேரி இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிடுகிறாா். 2014 மக்களவைத் தோ்தலில் அவா் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.
நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆனி ராஜா, ராகுலுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தாா். வயநாடு தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...