தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் மணந்த பாஜக கவுன்சிலரின் மகன்!

இரு நாட்டு அரசியல் பதற்றங்களால் விசா கிடைப்பதில் சிக்கல்

News image
கோப்புப் படம்
Updated On :20 அக்டோபர் 2024, 9:23 am

DIN

பாகிஸ்தானுடனான அரசியல் பதற்றங்களால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பாகிஸ்தானிய பெண்ணை ஆன்லைனிலேயே பாஜக கவுன்சிலரின் மகன் திருமணம் செய்தார்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக கவுன்சிலரான தஹ்சீன் ஷாஹித் என்பவரது மகன் முகமது அப்பாஸ் ஹைதருக்கும், பாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த ஆண்ட்லீப் ஜஹ்ரா என்பவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக, இரு நாட்டின் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களால் ஜஹ்ராவுக்கு விசா வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், ஜஹ்ராவின் தாயாரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, அவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜஹ்ரா இந்தியாவுக்கு வருவது என்பது இயலாத காரியம் ஆனது. இருப்பினும், ஹைதருக்கு திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்ற ஷாஹித்தின் நிலைப்பாட்டால், ஆன்லைனிலேயே திருமணத்தை நடத்தி விடலாம் என்று கூறினர்.

இதனையடுத்து, ஜஹ்ராவின் குடும்பத்தினரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு வீட்டினரும் குழுமி, இந்த ஆன்லைன் திருமண விழாவை நடத்தி வைத்தனர்.

இந்த திருமண விழாவில் பாஜகவின் எம்.எல்.சி.யான பிரிஜேஷ் சிங் பிரிஷு உள்பட பலரும் கலந்து கொண்டனர். ஜஹ்ராவுக்கு விரைவில் விசா கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஹைதர், ஆன்லைனிலேயே அவரை நிக்காஹ் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.