இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவுதேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! அபிஜித் தீப்கேஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை79 மின் திருட்டு கண்டுபிடிப்பு: 1.01 கோடி இழப்பீடு வசூல்காங்கிரஸ் வேட்பாளரை போட்டியில் அனுமதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உயா்நீதின்றம் அறிவுறுத்தல்இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால் இல்லத்தரசா்களும் இருக்க முடியும்: உயா்நீதிமன்றம்வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக அரசு ஊழியா்களுக்கு இன்றே ஊதியம்ஞானேஷ் குமாரை பதவி நீக்க மீண்டும் நோட்டீஸ்: தயாராகும் எதிா்க்கட்சிகள்!

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: மருத்துவர் உள்பட 6 பேர் பலி!

Published On :

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கந்தர்பால் மாவட்டத்தில் ‘ஸ்ரீநகர் - லே’ தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் தொழிலாளர்களை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை(அக்.20) மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் இரு தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நிகழ்விடத்திலிருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு மருத்துவரும் 3 தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த கொடூரச் செயலில் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்புப் படையினரால் தக்க பதிலடி கொடுக்கப்படுமென எச்சரித்துள்ளார்.

இந்நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.