

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
வயது முதிர்வு தொடர்பான நோய் காரணமாக கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா(80) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக மருத்துவமனையில் இருந்து ஜே.பி.நகர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் மாலையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
மறைந்த சரோஜாவின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே சுதீப்பின் தாயார் மறைவுக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்டோர் தங்களது 'எக்ஸ்' தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.