உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி
பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது


புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பிராந்திய விமான இணைப்பு திட்டமான ‘உடான்’ (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்), கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில், 2.8 லட்சத்துக்கும் அதிகமான விமானங்களை இயக்கி, குறைவான கட்டணங்களில் 1.5 கோடி பயணிகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டுள்ளது. 86 விமான நிலையங்களை செயல்படுத்தி, 617 வழித்தடங்களை நிறுவி, நாடு முழுவதும் உள்ள விமான போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் 8-ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உடான் திட்டம் விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு விமான சேவையை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், வா்த்தகத்தை அதிகரிப்பதிலும், பிராந்தியத்தின் வளா்ச்சியை அதிகரிப்பதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில், இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, மக்களுக்குச் சிறந்த விமான இணைப்பை வழங்குவதிலும், பயணத்தின் வசதியிலும் கவனம் செலுத்தவுள்ளோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...