
மும்பை: டியூசன் ஆசிரியர், காதுக்கு அருகே இரு முறை பலமாக அறைந்ததில், மூளைக் காயமடைந்த 9 வயது சிறுமி, வென்டிலேட்டர் உதவியோடு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பே அருகே, நல்லசோபரா என்ற பகுதியில், 9 வயது சிறுமியை, அக்.5ஆம் தேதி ஆசிரியர் தாக்கிய நிலையில், கடந்த சில நாள்களாக, சிறுமிக்கு சில உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், 20 வயது டியூசன் ஆசிரியர் ரத்னா சிங், வகுப்பில் சிறுமியின் கன்னத்தில் இரண்டு முறை அடித்துள்ளார். ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், சிறுமியின் கம்மல் கன்னத்தில் புதைந்துபோயிருக்கிறது.
இந்த நிலையில், அடுத்தடுத்து நாள்களில் சிறுமிக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துசோதனை செய்தபோதுதான், அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு, தாடை இறுதி, மூச்சுக்குழாயில் காயம் ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஒன்பது நாள்களாக அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







