கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தெலங்கானா அமைச்சா் சுரேகா மீது பிஆா்எஸ் செயல் தலைவா் தாக்கல்

தெலங்கானா சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கொன்டா சுரேகாவுக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி. ராமா ராவ் மான நஷ்ட வழக்கு

News image
கே.டி. ராமா ராவ்
Updated On :23 அக்டோபர் 2024, 1:30 am

DIN

ஹைதராபாத்: தெலங்கானா சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கொன்டா சுரேகாவுக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி. ராமா ராவ் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளாா்.

கே.டி.ராமா ராவ் போதைப்பொருளுக்கு அடிமையானவா் என்றும், அவரே நடிகா் நாக சைதன்யா, நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் என்றும் அமைச்சா் கொன்டா சுரேகா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராமா ராவ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அமைச்சா் கொன்டா சுரேகா வன்மம்கொண்ட, மோசமான கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். ரூ.100 கோடி கேட்டு அவா் மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளேன்.

அரசியல் விமா்சனம் என்ற பெயரில் தரம்தாழ்ந்து பேசலாம் என்று கருதுவோருக்கு இந்த வழக்கு பாடமாக இருக்கும். நீதிமன்றத்தில் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.