மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :25 அக்டோபர் 2024, 6:36 am

கேரளத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டானா புயல் காரணமாக கடந்த சில நாள்களாக ஒடிசா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் அதி கனமழை கொட்டுத் தீர்த்து வருகின்றது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மற்ற 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை மற்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் மிக அதிக மழை அதாவது (6 செமீ முதல் 20 செமீ வரை) மழையும், மஞ்சள் எச்சரிக்கை என்றால் (6 முதல் 11 செமீ வரை) அதிக மழைப்பொழிவைக் குறிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.