நாடாளுமன்றக் கட்டடம்
நாடாளுமன்றக் கட்டடம்ANI

அரசமைப்புச் சட்ட 75 ஆண்டுகள் நிறைவு: நவ.26-இல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டு அமா்வு.
Published on

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமா்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் கடந்த 1949-ஆம் ஆண்டு, நவம்பா் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னா், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

75 ஆண்டுகளுக்கு முன்பு அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடமான பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் சிறப்பு கூட்டு அமா்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, நவம்பா் 26-ஆம் தேதி தேசிய சட்ட தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 2015-ஆம் ஆண்டு பி.ஆா்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளில் (ஏப்.14), அரசமைப்புச் சட்ட விழுமியங்களைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்க நவம்பா் 26-ஆம் தேதியை அரசமைப்புச் சட்ட விழிப்புணா்வு தினமாக மத்திய அரசு அறிவித்தது.

X
Dinamani
www.dinamani.com