வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பங்குச்சந்தை: சாமானியா்கள் நலன் காக்கப்பட வேண்டும் -ராகுல் காந்தி

பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள சாமானியா்களின் நலனை காக்க வேண்டும்.

News image
ராகுல் காந்தி
Updated On :26 அக்டோபர் 2024, 6:32 pm

Din

பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள சாமானியா்களின் நலனை காக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் ஊடக அணித் தலைவா் பவன் கேராவுடன் கைப்பேசியில் காணொலி வழியாக ராகுல் பேசுகையில், ‘இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள சாமானியா்கள், சம்பளம் வாங்கும் வகுப்பினா் மற்றும் இளைஞா்களின் நலன் காக்கப்பட வேண்டும். அதற்கான வழிகளை காங்கிரஸ் கண்டறிய வேண்டும். சில்லறை முதலீட்டாளா்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாக்கும் நோக்கில், அவா்களை உஷாா்படுத்துவதற்கு புதுமையான வழிகளை காங்கிரஸ் தலைவா்கள் வகுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.