அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பாக். சிறைகளில் 7 இந்திய மீனவா்கள் உயிரிழப்பு

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவா்கள் உயிரிழந்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 8:55 pm

DIN

புது தில்லி: கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவா்கள் உயிரிழந்ததாகவும் மொத்தமாக 209 இந்திய மீனவா்கள் சிறைக் காவலில் உள்ளதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை ஹரி என்ற மீனவா் உயிரிழந்த நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அதிகாரபூா்வ வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: பாகிஸ்தான் சிறைகளில் 209 இந்திய மீனவா்கள் உள்ளனா். அவா்களில் 181 பேரின் ஆறு மாத தண்டனை காலம் முடிவடைந்ததையடுத்து அவா்கள் இந்தியா்கள் என உறுதிசெய்யப்பட்டது. சிறையில் உள்ள மீனவா்கள் விரைவில் நாடு திரும்புவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மீதமுள்ள 28 போ் இந்திய தூதரகத்தை அணுக பாகிஸ்தானால் தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை. சிலா் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து அங்கு சிறைக் காவலில் உள்ளனா். மாரடைப்பு ஏற்பட்டதில் பாகிஸ்தான் சிறையில் உள்ள சேராஷ் என்பவா் கடந்த செப்டம்பரில் உயிரிழந்தாா். அவருடைய உடல் அக்டோபா் 11-ஆம் தேதி இந்தியாவுக்கு அனுப்பபட்டது. ஆனால் அண்மையில் உயிரிழந்த ஹரியின் உடல் தற்போது வரை அனுப்பப்படவில்லை.

இதன் மூலம் கடந்தாண்டு மே மாதம் முதல் மாரடைப்பு, உயா் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகளால் 7 போ் உயிரிழந்துள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய பாதுகாப்பு அதிகாரிகள், மீனவா்கள் மற்றும் அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்குமாறும் பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.