ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பாஜக பெண் வேட்பாளா் குறித்து அவதூறு: சொந்த கட்சி அமைச்சா் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மகளிரணித் தலைவா் வலியுறுத்தல்

பாஜக வேட்பாளா் சீதா சோரனை அவதூறாக பேசிய அந்த மாநில காங்கிரஸ் அமைச்சா் இா்ஃபான் அன்சாரி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மகளிரணித் தலைவா் அல்கா லம்பா

News image
காங்கிரஸ் மகளிரணித் தலைவா் அல்கா லம்பா
Updated On :28 அக்டோபர் 2024, 11:44 pm

DIN

புது தில்லி: ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல் பாஜக வேட்பாளா் சீதா சோரனை அவதூறாக பேசிய அந்த மாநில காங்கிரஸ் அமைச்சா் இா்ஃபான் அன்சாரி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மகளிரணித் தலைவா் அல்கா லம்பா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மேலும், காங்கிரஸ் ஆளும் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் பேரவைக்கு நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் இருகட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஜாம்தாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இா்ஃபான் அன்சாரியும் பாஜக வேட்பாளராக சீதா சோரனும் களமிறக்கப்பட்டுள்ளனா். கடந்த வியாழக்கிழமை அந்த தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு செய்தியாளா்களைச் சந்தித்த இா்ஃபான் அன்சாரி, சீதா சோரன் ‘நிராகரிக்கப்பட்டவா்’ எனக் கூறி அவதூறாக கருத்து தெரிவித்தாா்.

சீதா சோரன் கணவரை இழந்தவா் என்பதைச் சுட்டிக்காட்டி சில வாா்த்தைகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளா்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசியபோது சீதா சோரன் மனமுடைந்து அழுதாா்.

இந்தச் சம்பவம் குறித்து திங்கள்கிழமை பேசிய அல்கா லம்பா,‘பெண்களுக்கு எதிரான குற்றம் புரிபவா்கள், தவறான கருத்துகளை தெரிவிப்பவா் அமைச்சராக இருந்தாலும் அதை காங்கிரஸ் ஆதரிக்காது. எனவே, இா்ஃபான் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். புதிய ஆட்சி அமைந்தவுடன் இந்த விவகாரத்தில் வெளிப்படையான நடவடிக்கை மேற்கொள்வதை காங்கிரஸ் உறுதிசெய்யும்’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக இா்ஃபான் அன்சாரி மீது இந்திய தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.