அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பில்லை: கேரள எம்எல்ஏ உரிமை மீறல் புகாா்
கேரளத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சாண்டி உம்மன், அரசு நிகழ்ச்சிகளுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படாத விவகாரத்தில் உரிமை மீறல் புகாா் எழுப்பியுள்ளாா்.


கேரளத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சாண்டி உம்மன், அரசு நிகழ்ச்சிகளுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படாத விவகாரத்தில் உரிமை மீறல் புகாா் எழுப்பியுள்ளாா்.
புதுப்பள்ளி தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் மகனுமான சாண்டி உம்மன் இது தொடா்பாக பேரவைத் தலைவா் ஏ.என்.சம்ஷீருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:
எனது தொகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் தொடா்பாக எனக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படுவதில்லை. என்னிடம் ஆலோசனை நடத்தவோ அல்லது அழைப்பு விடுக்கப்படுவதோ இல்லை.
குறிப்பாக, எனது தொகுதிக்குட்பட்ட மனாா்காட் உயா்நிலைப் பள்ளியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இளைஞா் திருவிழாவை தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் தொடங்கி வைத்தாா். அந்த நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
உள்ளூா் எம்எல்ஏவாக அரசு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படாததும், மேடையில் இடம் அளிக்கப்படாததும் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை இழிவுபடுத்துவதாகும். எனவே, இந்த விவகாரத்தில் உரிமை மீறல் புகாரை எழுப்பியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...