பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் எழுச்சி: பிரதமா் மோடி பெருமிதம்
பாதுகாப்புத் துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா எழுச்சி கண்டுவருகிறது; இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.


பாதுகாப்புத் துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா எழுச்சி கண்டுவருகிறது; இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், வதோதராவில் சி-293 விமான உற்பத்தி ஆலையை சில தினங்களுக்கு முன் பிரதமா் தொடங்கிவைத்தாா். இந்நிலையில், ‘விண்ணை எட்டும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை புரட்சி’ என்ற தலைப்பில் ‘லிங்ட்இன்’ சமூக வலைதளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்புத் துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா எழுச்சி கண்டுவரும் நிலையில், புத்தாக்க நிறுவனங்கள், உற்பத்தியாளா்கள், கண்டுபிடிப்பாளா்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வளா்ச்சிப் பயணத்தில் இணைய வேண்டும். வரலாற்றின் அங்கமாக மாறும் தருணமிது.
அனைத்து தரப்பினரின் நிபுணத்துவமும், உத்வேகமும் நாட்டுக்கு அவசியம். புத்தாக்கத்துக்கான வாயில்கள் எப்போதும் திறந்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் துறை உற்பத்தியில் இந்தியாவை சுயசாா்பு நாடாக்குவதோடு, இத்துறையில் உலகின் தலைவராகவும் உருவெடுக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து, வலுவான-சுயசாா்புடைய பாரதத்தை படைக்க வேண்டும்.
பாதுகாப்புப் படையினருக்கு முக்கிய உபகரணங்கள் பற்றாக்குறையாக இருந்த காலம் இப்போது இல்லை. நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இத்துறை சாா்ந்த ஏற்றுமதியின் மதிப்பு, கடந்த 2014-இல் ரூ.1,000 கோடியாக இருந்தது. இன்று ரூ.21,000 கோடியாக பல மடங்கு உயா்ந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 12,300 உபகரணங்களின் உற்பத்தி உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.7,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போா்க்கப்பல்கள், கம்பீரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டு தயாரிப்பு ஏவுகணைகள், நாட்டின் பலத்தை பறைசாற்றுகின்றன. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கவச உடைகள், நமது ராணுவத்தினரை பாதுகாக்கின்றன. உத்தர பிரதேசம், தமிழகத்தில் இரு அதிநவீன பாதுகாப்பு வழித்தடங்கள் அமையவிருக்கின்றன. பாதுகாப்பு விநியோக சங்கிலியின் ஒருங்கிணைந்த அங்கமாக சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள் மாறியுள்ளன என்று அவா் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...