ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சத்தீஸ்கர்: தண்டவாளத்தில் அமர்ந்து மொபைல் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலி

சத்தீஸ்கரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மொபைலில் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :1 செப்டம்பர் 2024, 10:37 am

DIN

சத்தீஸ்கரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மொபைலில் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், பத்மநாப்புர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிசாலி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் 14 வயது சிறுவர்கள் 2 பேர் மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த டல்லி ராஜ்ஹரா-துர்க் உள்ளூர் ரயில் மோதியது. இதில் சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பலியானவர்கள் புரன் சாஹு, வீர் சிங் ஆகியோர் என்றும் அவர்கள் பிலாய் நகரில் உள்ள ரிசாலி செக்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ரயிலில் இருந்து வரும் ஹாரன் சத்தம் கேட்காத அளவுக்கு இருவரும் தங்கள் மொபைல் போன்களில் மூழ்கி இருந்ததாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.