ஜம்மு - காஷ்மீர் தேர்தல்: பாஜகவின் 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் செப். 18, 25, அக். 1 ஆகிய தேதிகளில் பேரவைத் தோ்தல்
ஜம்மு - காஷ்மீர் தேர்தல்: பாஜகவின் 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, செப்டம்பா் 18, 25, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாகப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி ஃபரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 4-ஆம் கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று(செப். 2) நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், இதுவரை மொத்தம் 51 வேட்பாளர்களின் பெயர்கள் பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் காஷ்மீரில் பாஜக சார்பில் 14 பேர் போட்டியிடுகின்றனர்.

அதன்படி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்முவின் நௌஷெராவில் போட்டியிடுகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட ரவீந்தர் ரெய்னா வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com