ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 6-ஆம் கட்ட பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, செப்டம்பா் 18, 25, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாகப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் களம் காண்கின்றன.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 6-ஆம் கட்ட பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, உதம்பூர் கிழக்கில் ஆர்எஸ் பதானியாவும், பந்திபோராவில் நசீர் அகமது லோனும் போட்டியிட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் பலி: மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! ஒருவர் பலி! | Jammu & Kashmir

ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: துணை நிலை ஆளுநர், முதல்வரிடம் கேட்டறிந்த அமித் ஷா

33 வெளிநாட்டினர் உள்பட 8,796 பக்தர்கள் அடங்கிய 9-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET




