டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காஷ்மீா் எல்லையில் ஊடுருவ முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவ முயன்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக்கொலை
Updated On :9 செப்டம்பர் 2024, 8:50 pm

DIN

ரஜௌரி/ ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினா் முறியடித்தனா். இதில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக ராணவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய நவ்ஷேராவின் லாம் செக்டாரில், இந்திய பகுதிக்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்ததில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

துப்பாக்கிச் சண்டைக்கு பின்னா் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டதில், 2 ஏகே-47 மற்றும் ஒரு கைத்துப்பாக்கி கைபற்றப்பட்டது. தேடுதல் நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் உள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.