விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹரியாணா சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநர் உத்தரவு!

அக்டோபா் 5 தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹரியாணா ஆளுநர் உத்தரவு!

News image

ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா - படம் | பண்டாரு தத்தாத்ரேயா எக்ஸ் தளப் பதிவு

Updated On :12 செப்டம்பர் 2024, 1:12 pm

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு அக்டோபா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில், ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இதனிடையே, தேர்தலுக்கு முன் சட்டப்பேரவையைக் கலைக்கும் முன்மொழிவுக்கு முதல்வர் நயாப் சைனி தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை(செப்.11) ஒப்புதல் அளித்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா வியாழக்கிழமை(செப்.12) உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புதிய அரசு அமையும் வரை நயாப் சைனி முதல்வர் பொறுப்பில் நீடிப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.