/

வல்லுறவு முயற்சி! டாக்டருக்கு செவிலியர் செய்த செம சம்பவம்!

பிகாரில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவரின் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டது பற்றி...

News image
கோப்புப்படம்- Express Illustrations
Updated On :13 செப்டம்பர் 2024, 5:46 am

DIN

பிகாரில் நண்பர்களுடன் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இயன்முறை மருத்துவரின்(பிசியோதெரபிஸ்ட்) ஆண் உறுப்பை கத்தியால் செவிலியர் அறுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மருத்துவரை கைது செய்து காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை

பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், புதன்கிழமை இரவு நோயாளிகளை கவனித்த பிறகு, செவிலியர் ஒருவர் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது, அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஆண் பிசியோதெரபிஸ்ட், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து, அறையில் கதவை உள்பக்கமாக தாழிட்டு செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

அந்த சமயத்தில், செவிலியர் கையில் கிடைத்த கத்தியை எடுத்து பிசியோதெரபிஸ்ட்டின் ஆண் உறுப்புப் பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்த தப்பித்த செவிலியர், காவல்துறையின் உதவி எண்ணான 112-ஐ அழைத்து புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மதுபோதையில் பலத்த காயங்களுடன் கிடந்த மருத்துவர் உள்பட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

குற்றச்சாட்டு எழுப்பிய பெண்ணின் வாக்குமூலத்தில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினரை, மருத்துவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.