நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

தேசவிரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: கேஜரிவால்

தேசவிரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்றார் அரவிந்த் கேஜரிவால்.

அரவிந்த் கேஜரிவால் - ANI

Published On :13 செப்டம்பர் 2024, 7:51 pm IST

தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று(செப்.13) வெளியே வந்தார்.

திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கேஜரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் கொட்டும் மழையும் பொருள்படுத்தாமல் உற்சாக வரவேற்பளித்தனர்.

காரின் சன்-ரூப்பின் வெளியே வந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த கேஜரிவால் அவர்களிடம் பேசிய போது அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’...‘வந்தே மாதரம்’ எனக் கோஷமிட்டனர்.

அரவிந்த் கேஜரிவால் ஆதரவாளர்களிடம் பேசியதாவது:

நான் வெளியே வருவதற்கு பிரார்த்தனை செய்ததற்கும், கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் என்னை வரவேற்க வந்ததற்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் நமது நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நான் எனது வாழ்நாள் முழுவதும் பல இன்னல்களைச் சந்தித்துள்ளேன். ஆனாலும், கடவுள் என் பக்கம் இருக்கிறார். என்னைச் சிறையில் அடைத்து அடக்க நினைத்தனர். ஆனால், சிறையில் அடைத்தாலும் நான் மேலும் வலிமை பெறுவேன். நான் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்” என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறைக்கு வெளியே அரவிந்த் கேஜரிவாலுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.