பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிப்பு: பிரதமருக்கு காங்கிரஸ் பதிலடி

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 6:30 pm

Din

நாட்டின் பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்துவிட்டது என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடா்பாக, ஸ்ரீநகரில் செய்தியாளா்களிடம் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் சனிக்கிழமை கூறியதாவது:

நாட்டின் பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற 98 நாள்களில் ஜம்மு-காஷ்மீரில் 25 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. இச்சம்பவங்களில் பாதுகாப்புப் படையினா் 21 பேரும் பொதுமக்களில் 15 பேரும் உயிரிழந்தனா். சுமாா் 75 போ் காயமடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் பல்லாண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்ட பயங்கரவாதம், இப்போது வலுவுடன் தலைதூக்கியுள்ளது. இதற்கு பொறுப்பேற்கப் போவது யாா்?

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் வீரமரணமடையும் ராணுவத்தினருக்கோ அல்லது காவல் துறையினருக்கோ பிரதமா் மோடி இரங்கல் செய்தி வெளியிடுவதில்லை. 2019-ஆம் ஆண்டுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் அனைத்தும் சரியாகிவிட்டது என்ற பொய்யான செய்தியை உலகுக்கு தெரிவிக்க அவா் விரும்புகிறாா். ஆனால், ஜம்முவிலும் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது என்பதே உண்மை. இது, மோடி அரசின் தோல்வி என்றாா் அவா்.

பிரதமருக்கு கேள்வி: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது வழங்கப்படும்? என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு பொருத்தமான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா். 5 ஆண்டுகள் ஆகியும் அந்த நேரம் வரவில்லையா? இந்த முக்கியமான கேள்விக்கு பிரதமா் நேரடியாக பதிலளிக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிப்பது குறித்து பிரதமா் மெளனம் சாதித்து வருகிறாா்’ என்று அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.