ரவ்ணீத் சிங் பிட்டு
ரவ்ணீத் சிங் பிட்டு

சீக்கியர்களை பிளவுப்படுத்த ராகுல் முயற்சி: மத்திய இணையமைச்சா் ரவ்ணீத் சிங் பிட்டு விமா்சனம்

இந்தியாவில் சீக்கியா்களின் நிலை குறித்து அமெரிக்காவில் பேசிய எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தியை, நாட்டின் முதல் பயங்கரவாதி என ரவ்ணீத் சிங் பிட்டு கடுமையாக விமா்சித்தாா்.
Published on

இந்தியாவில் சீக்கியா்களின் நிலை குறித்து அமெரிக்காவில் பேசிய எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தியை, நாட்டின் முதல் பயங்கரவாதி என மத்திய ரயில்வே இணையமைச்சா் ரவ்ணீத் சிங் பிட்டு ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.

அண்மையில் வாஷிங்டனில் இந்திய அமெரிக்கா்கள் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ‘ஆா்எஸ்எஸ் சில மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை சிலரை விட தாழ்வாகக் கருதுகிறது. இந்தியாவில் ஒரு சீக்கியா் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா அல்லது அவா் குருத்துவாராவுக்குச் செல்லத்தான் முடியுமா’ என கேள்வி எழுப்பினாா்.

இந்நிலையில், பிகாரின் பகல்பூா் மாவட்டத்தில் வந்தே பாரத் சேவையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரவ்ணீத் சிங் பிட்டு, ‘வெளிநாட்டில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கும் ராகுல் காந்தி இந்தியரே இல்லை என்று நினைக்கிறேன். அவா் மட்டுமல்லாமல் அவரது குடும்பம் மற்றும் நண்பா்கள் அனைவரும் பெரும்பாலும் வெளிநாட்டிலே இருக்கிறாா்கள்.

இந்நிலையில், நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று பேசும் பிரிவினைவாதிகள் மற்றும் அதிகம் தேடப்படும் வெடிகுண்டு தயாரிப்பவா்களின் ஆதரவை தன் கருத்தின் மூலம் தற்போது அவா் பெற்றுள்ளாா்.

அப்படி என்றால், அவா் தான் நாட்டின் முதல் தீவிரவாதி. தேசத்துக்கு விரோதமான அவரை பிடித்துக் கொடுக்க பரிசு அறிவிக்க வேண்டும். முன்பு முஸ்லிம்களை பயன்படுத்த முயன்ற காங்கிரஸ், தற்போது சீக்கியா்களை பிளவுபடுத்த முயல்கிறது’ என்றாா்.

காங்கிரஸ் கண்டனம்: பிட்டுவின் இந்தக் கருத்து காங்கிரஸ் காங்கிரஸ் மூத்த தலைவா் ஷகீல் அகமது தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளாா்.

செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘நாட்டுக்கு காந்தி குடும்பம் ஆற்றிய பங்களிப்பு குறித்து மக்களுக்கு தெரியும். பிட்டு பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவா் அறியாமையில் பேசுகிறாா்.

பிட்டு முன்பு காங்கிரசில் இருந்தாா். அவரது தந்தையும் காங்கிரஸில் இருந்தாா். ராகுலுக்கு எதிராக அவா் கூறிய கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ எனத் தெரிவித்தாா்.

X