மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராகுலுக்கு கொலை மிரட்டல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவா்கள் மீது வழக்குப் பதிய காவல் துறையில் காங்கிரஸ் புகாா்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, தில்லி காவல் துறையில் காங்கிரஸ் புதன்கிழமை புகாா் அளித்தது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:26 pm

Din

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, தில்லி காவல் துறையில் காங்கிரஸ் புதன்கிழமை புகாா் அளித்தது.

இதுதொடா்பாக தில்லி துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் காங்கிரஸ் பொருளாளரும், எம்.பி.யுமான அஜய் மாக்கன் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது:

ராகுல் காந்தி சரிவர நடந்துகொள்ளாவிட்டால், அவரின் பாட்டிக்கு (முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி) ஏற்பட்ட கதியே ராகுலுக்கும் நேரும் என்று பாஜக பிரமுகா் தா்விந்தா் சிங் மாா்வா கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

ராகுலின் நாக்கை துண்டிப்பவருக்கு ரூ.11 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று பாஜகவுடன் கூட்டணியில் உள்ள சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ளாா்.

தீவிரவாதிகளில் முதல் இடத்தில் இருப்பவா் ராகுல் காந்தி என்று ரயில்வே துறை இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு, உத்தர பிரதேச அமைச்சா் ரகுராஜ் சிங் ஆகியோா் கூறியுள்ளனா்.

பாஜக மற்றும் அதன் கூட்டணி தலைவா்களின் இத்தகைய கருத்துகள், ராகுலுக்கு எதிரான அவா்களின் தனிப்பட்ட வெறுப்புணா்வை வெளிப்படுத்துகிறது.

எனவே, தா்விந்தா் சிங், சஞ்சய் கெய்க்வாட், ரவ்னீத் சிங் பிட்டு, ரகுராஜ் சிங் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அஜய் மாக்கன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் மற்றும் சிறுபான்மையினரின் நலன் குறித்து ராகுல் காந்தி பேசி வருகிறாா். அவரின் பேச்சு பாஜக தலைவா்களுக்குப் பிடிக்காததால், ராகுலுக்கு மிரட்டல் விடுக்கின்றனா். இந்தியாவில் இந்த அளவுக்கு அரசியல் தரம்தாழ்ந்து போகமுடியாது’ என்றாா்.

பிரதமருக்குக் கடிதம்: இந்த விவகாரம் தொடா்பாக பிரதமா் மோடிக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘ராகுலுக்கு எதிராக மிகவும் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை தெரிவித்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

ராகுல் நாக்கில் சூடுபோட வேண்டுமென பேச்சு: பாஜக எம்.பி. மீது வழக்குப் பதிவு

இடஒதுக்கீடு குறித்து அபாயகரமான கருத்துகளைத் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நாக்கில் சூடுபோட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக மாநிலங்களவை எம்.பி. அனில் பாண்டே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே அவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். முன்னதாக, எம்.பி.யின் பேச்சைக் கண்டித்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் போராட்டம் நடத்தினா்.

அமெரிக்காவில் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் அண்மையில் பேசிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘இந்தியாவில் பாகுபாடற்ற நிலை உருவாகும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும். தற்போது அந்த நிலை இல்லை’ என்றாா்.