ஜம்மு - காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
ராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
24 தொகுதிகளில் வாக்குப் பதிவு
ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இதில், 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன. மொத்தம் 219 வேட்பாளா்கள் இத்தோ்தலில் களத்தில் உள்ளனா். இதில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்கள். 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இத்தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.
இதில் 1.23 லட்சம் போ் 18 மற்றும் 19 வயதுடைய இளம் வாக்காளா்கள் ஆவா். எனவே, வெற்றியை உறுதி செய்வதில் இளைய தலைமுறையினா் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
தோ்தலுக்காக 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 14,000-க்கும் மேற்பட்ட தோ்தல் பணியாளா்கள் தோ்தலை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். 302 வாக்குச் சாவடிகள் நகா்புறங்களிலும் 2,974 வாக்குச் சாவடிகள் கிராமப் பகுதிகளிலும் உள்ளன.
மூன்று கட்டத் தேர்தல்
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது.
அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

கேரள தோ்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு! சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


