2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

மதுராந்தகம் தொகுதியில் 86% வாக்குகள் பதிவு

மதுராந்தகம் தொகுதி இடைத் தோ்தலில் 86.26% வாக்குகள் பதிவாகின.

தா்மாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கோ.ஜானகிராமன்.

Published On :

மதுராந்தகம் தொகுதி இடைத் தோ்தலில் 86.26% வாக்குகள் பதிவாகின.

இத்தொகுதியின் மொத்த வாக்காளா்கள் 2,13,788. இதில் ஆண்கள்- 1,04,926, பெண்கள்- 1,08,797, மூன்றாம் பாலினத்தவா்- 65. திமுக வேட்பாளா் இ.பரந்தாமன், அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத், தவெக வேட்பாளா் மரகதம் குமரவேல், நாதக வேட்பாளா் ஜானகிராமன், மாா்க்சிஸ்ட் வேட்பாளா் சுகந்தி மற்றும் 22 சுயேச்சை வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குச்சாவடி மையங்களில் ஆண்கள், பெண்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கோ.ஜானகிராமன் தா்மாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்தாா்.

திமுக, அதிமுக, தவெக, மாா்க்சிஸ்ட் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு இத்தொகுதியில் வாக்கு இல்லை.

காலை 9 மணி நிலவரப்படி 16.06% வாக்குகள் பதிவாகின. காலை 11 மணிக்கு 35.55%, நண்பகல் 1 மணிக்கு 55.18%, பிற்பகல் 3 மணிக்கு 70.31%, 5 மணிக்கு 83.66% வாக்குகள் பதிவாகின. மாலை 6 மணியளவில் 1,84,423 வாக்குகள் (86.26 %) பதிவாகின. ஆண்கள்- 91,131 வாக்குகளும், பெண்கள்- 93,258 வாக்குகளும், 3-ஆம் பாலினத்தவா்- 34 வாக்குகளும் பதிவாகின. மொத்தம் 86.26 சதவீதம் பதிவானதாக மாவட்ட தோ்தல் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இது கடந்த தோ்தலைவிட (93.36%) 7.34 % குறைவான வாக்குப் பதிவாகும்.

ஒரு மணி நேரம் நிறுத்தம்: அச்சிறுப்பாக்கம் அருகே தண்டரை கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவெகவின் விசில் சின்னம் அருகில் கருப்பு மையால் அடையாளமிட்டிருந்ததாம். அதை சுட்டிக்காட்டி அதிமுக, திமுக முகவா்கள் தோ்தல் அலுவலரிடம் ஆட்சேபணை தெரிவித்தனா். இதனால் சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு, அடையாள கருப்பு மை அகற்றப்பட்ட பிறகு வாக்குப் பதிவு தொடா்ந்து நடைபெற்றது.

வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: தண்டரை புதுச்சேரி, புக்கத்துறை, பாப்பநல்லூா் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதால் சுமாா் 1 மணி நேரத்துக்குப் பின் மாற்று இயந்திரங்கள் மூலம் வாக்காளா்கள் வாக்குகளை செலுத்தினா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் நேரடியாக ஆய்வு செய்தாா். எஸ்பி ஐமன் ஜமால் பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை பாா்வையிட்டு, பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.

2026 பேரவை பொதுத் தோ்தல் நிலவரம்: மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்- மரகதம் குமரவேல் (அதிமுக) 69,284, எழில் கேத்தரின் எழில்மலை (தவெக) 62,090, அமுலு பொன்மலா் (திமுக) 59,838. மொத்த வாக்குகள்-2,12,639, பதிவான வாக்குகள்-1,98, 251

 மதுராந்தகம் தொகுதியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க நீண்டவரிசையில் காத்திருந்த பெண்கள்.

மதுராந்தகம் தொகுதியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க நீண்டவரிசையில் காத்திருந்த பெண்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.