மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: 5 மணி நிலவரம்!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் (மாலை 5 மணி) குறித்து...

வாக்களிக்கும் மக்கள் - பிடிஐ
தாராபுரம் தொகுதியில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 78.53% வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுராந்தகத்தில் 83.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கும் அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மாலை 5 மணி நிலவரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 78.53% வாக்குகள் பதிவாகியுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் 83.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 78.83% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் 79.39%
மேற்கு வங்கத்தின் ரெஜிநகர் தொகுதியில் 78.42% வாக்குகள்
அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவைத் தொகுதியில் 76% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Summary
Madhuranthakam and Dharapuram by-elections: Status at 5 PM
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







