முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஜம்மு- காஷ்மீர் தேர்தல்: 1 மணி நிலவரம்!

ஜம்மு- காஷ்மீர் முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 2:41 pm IST

ஜம்மு - காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக பஹல்காமில் 47.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து டி.எச்.போராவில் 43.66 சதவீதமும், தூருவில் 41.20 சதவீதமும் மற்றும் கோகர்நாக்கில் 41 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக டிராலில் 26.75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒட்டுமொத்தமாக, ஜம்மு பகுதியில் உள்ள இந்தர்வால் தொகுதியில் அதிகபட்சமாக 60.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.