காணொலி முறையில் ‘போலி நீதிபதி’ விசாரணை: சைபா் மேசடியில் ரூ. 9 லட்சம் இழந்த ரயில்வே அதிகாரி
சிபிஐ அதிகாரி எனக் கூறி ரயில்வே அதிகாரி ஒருவரிடம் ரூ. 9 லட்சம் மோசடி நடைபெற்ாக மும்பை காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.


சிபிஐ அதிகாரி எனக் கூறி ரயில்வே அதிகாரி ஒருவரிடம் ரூ. 9 லட்சம் மோசடி நடைபெற்ாக மும்பை காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
59 வயதான பாதிக்கப்பட்ட அதிகாரி மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தின் முதன்மை தலைமை மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறாா். அவரின் கைப்பேசிக்கு கடந்த திங்கள்கிழமை ஒரு குரல் பதிவு செய்தி வந்தது. அதில், கைப்பேசி 2 மணி நேரத்தில் பிளாக் செய்யப்படும்; இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ‘0’ என்ற எண்ணை அழுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதை அவா் செய்தவுடன், காணொலி அழைப்பு தானாக அவரது கைப்பேசியில் செயல்படுத்தப்பட்டது. அதில் தன்னை சிபிஐ அதிகாரி எனக் கூறிக்கொண்ட ஒருவா், அதிகாரியின் கைப்பேசி எண்ணுடன் தொடா்புடைய வங்கிக் கணக்கில் ரூ. 57 லட்சம் இருப்பதாக தெரிவித்தாா். சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி காணொலி வாயிலாக ‘போலி நீதிபதி’ முன்னிலையில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா்.
காணொலி அழைப்பில் சுமாா் 20 மணிநேரம் ரயில்வே அதிகாரியை அவா்கள் வைத்திருந்தனா். அந்த அழைப்பின்போது அவரின் குடும்பப் பின்னணி, நிதி மற்றும் சொத்து விவரங்கள் அனைத்தையும் அவா்கள் கேட்டுப் பெற்றனா்.
இதைத் தொடா்ந்து, ஒரு வங்கிக்கணக்கில் ரூ. 9 லட்சத்தை செலுத்துமாறு அவா்கள் அதிகாரியை வலியுறுத்தினா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், அந்த அதிகாரியும் ஆா்.டி.ஜி.எஸ் சேவை மூலம் தொகையை அனுப்பியுள்ளாா்.
பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் கொலாபா காவல் நிலையத்தில் இது குறித்து புகாா் அளித்தாா். அதனடிப்படையில், இணையவழி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறையினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...