இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ராகுல்காந்திக்கு மிரட்டல்: கொட்டும் மழையிலும் போராட்டம்!

ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை எதிர்த்து தில்லியில் போராட்டம் நடந்துவருகிறது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 8:03 am

DIN

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்திக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை எதிர்த்து தில்லியில் போராட்டம் நடந்துவருகிறது.

சர்ச்சை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் பரிசளிக்கப்படும் என்றும், ராகுலின் பாட்டிக்கு (இந்திரா காந்தி) நடந்தது போல ராகுலுக்கும் நடக்கும் என சிவசேனை எம்எல்ஏ மற்றும் மத்திய அமைச்சர் ரன்வீர் சிங் பிட்டு ஆகியோர் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியது.

போராட்டம்

இந்த நிலையில் தில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் தலைமையில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கொட்டும் மழையிலும் குடைகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ராகுல்காந்திக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை எதிர்த்து தில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைவர் பேச்சு

மத்திய அமைச்சர் ரன்வீர் சிங் பிட்டு மற்றும் சிவசேனை எம்எல்ஏ ஆகியோர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்திருப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் கூறுகையில், “நாங்களும் ராகுல் காந்தியின் வழியில் சட்ட அரசியலமைப்பை பாதுக்காக்க போராடி வருகிறோம். நாங்கள் பாஜகவை பாத்து பயப்படவில்லை. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் ராகுல்காந்திக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.