எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

‘நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0’ : அக்டோபரில் தொடக்கம்

‘நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0’ அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :20 செப்டம்பர் 2024, 10:30 pm

Din

‘நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0’ அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள ரூ.35 லட்சம் கோடி மதிப்பிலான 2.7 கோடி நேரடி வரி பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும்.

இதுதொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘2024, அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0 அமலுக்கு வரும்’ என குறிப்பிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றம், வருமான வரி தீா்ப்பாயங்கள் உள்ளிட்டவையில் 2024, ஜூலை 22- அன்றிலிருந்து நிலுவையில் உள்ள நேரடி வரி சாா்ந்த வழக்குகளுக்கு தீா்வு காண இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டத்தின் 1.0 மூலம் வரி செலுத்தும் 1 லட்சம் போ் பயனடைந்தனா். இதன்மூலம் அரசுக்கு ரூ.75,000 கோடி வரி வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.