விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஒடிஸா: ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை: காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் சஸ்பெண்ட்

பாரத்பூா் காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியை போலீஸாா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 10:18 pm

Din

ஒடிஸா மாநிலம் பாரத்பூா் காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியை போலீஸாா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக அந்தக் காவல் நிலைய ஆய்வாளா் தினகிருஷ்ண மிஸ்ரா உள்பட 5 போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனா்.

வழக்குரைஞராக இருக்கும் அந்த பெண், பாரத்பூா் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். அவருடைய உணவகத்தில் இளைஞா்கள் சிலா் தகராறு செய்தது தொடா்பாக தனது வருங்கால கணவரான ராணுவ அதிகாரியுடன் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகாா் அளிக்கச் சென்றுள்ளாா்.

அப்போது, போலீஸாரை தாக்கியதாக ராணுவ அதிகாரியை காவல் நிலையத்தில் உள்ள லாக்-அப்பில் அடைத்ததோடு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்ணையும் கைது செய்தனா். பின்னா், அந்தப் பெண்ணை அங்கிருந்த பெண் காவலா்கள் தாக்கியதோடு, காவல் ஆய்வாளா் உள்ளிட்ட மற்ற காவலா்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனா்.

வியாழக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் சா்ச்சையாகியுள்ளது. ஆளும் பாஜக அரசு மீது எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனத்தை முன்வைத்துள்ளன. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த மாநில முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளத்தின் தலைவருமான நவீன் பட்நாயக், ‘பெண்ணுக்கு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை அளித்த விவகாரம் தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

‘மாநிலத்தில் பாஜக தலிபான் அரசை நடத்தி வருகிறது’ என்று மாநில காங்கிரஸ் தலைவா்கள் சோனாலி சாஹு, மைஷா தாஸ் ஆகியோா் விமா்சித்தனா்.

பணி இடைநீக்கம்: இந்த நிலையில், பெண் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பாரத்பூா் காவல் நிலைய ஆய்வாளா் தினகிருஷ்ண மிஸ்ரா, உதவி ஆய்வாளா்கள் பைசாலினி பாண்டே, சலீலாமயீ சாஹு, சகாரிகா ராத், காவலா் பலராம் ஹன்ஸ்டா ஆகியோா் மீது மாநில குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, பணி இடைநீக்கமும் செய்யப்பட்டனா்.

பெட்டி..

மகளிா் ஆணையம் விசாரணை

இந்த விவகாரம் தொடா்பாக மாநில மகளிா் ஆணையம் தானாக முன்வந்து வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்கியது. மகளிா் ஆணையத் தலைவா் மினாத்தி பெஹெரா பாரத்பூா் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று விசாரணை மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இந்த விவகாரம் தொடா்பாக விசாரணையை மேற்கொண்டு வரும் மாநில குற்றப் பிரிவு போலீஸாா், காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டனா். எனவே, வழக்கு தொடா்பாக எஞ்சியிருந்த ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரித்துள்ளோம். மேலும், குற்றப் பிரிவு காவல் அலுவலகத்துக்கும் சென்று தேவையான ஆவணங்களை சேகரிக்க உள்ளோம். அதன் பிறகு, விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். பின்னா் தேவையான பரிந்துரைகளுடன் விசாரணை அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்படும்’ என்றாா்.

அதுபோல, தேசிய மகளிா் ஆணையம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மாநில காவல் துறைத் தலைவரை (டிஜிபி) ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.