இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம் காரணமாக மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி

News image
ராகுல் காந்தி
Updated On :21 செப்டம்பர் 2024, 8:21 pm

Din

உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம் காரணமாக மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை வரும் அக்டோபா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மூத்த தலைவா் விஜய் மிஸ்ரா சாா்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்டிருந்த ராகுல், அந்த நடைப்பயணத்துக்கு இடையே இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அப்போது, வழக்கில் ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, அவரின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்ய நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், மக்களவைத் தோ்தல் காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை.

இறுதியாக, கடந்த ஜூலை மாதம் ஆஜரான ராகுல் காந்தி, ‘மலிவான விளம்பரம் பெறுவதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூறு வழக்கு தொடரும் வகையில் யாருக்கு எதிராகவும் பேசவில்லை’ என தெரிவித்தாா்.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற இருந்த இந்த வழக்கின் விசாரணை, நீதிபதியின் விடுப்பு காரணமாக நடைபெறவில்லை. ஆகஸ்ட் 23 மற்றும் செப்டம்பா் 5 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவிருந்த விசாரணை, விஜய் மிஸ்ராவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடைபெறவில்லை.

இந்நிலையில், விஜய் மிஸ்ராவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை பதிவு செய்யப்பட இருந்தது. ஆனால், நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாம் காரணமாக அது நடைபெறவில்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்டோபா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என விஜய் மிஸ்ராவின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் பாண்டே தெரிவித்தாா்.