
பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரவிந்த் கேஜரிவால் பேசியிருப்பதாவது, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களை தேசியவாதிகள் என்றும், தேசப்பற்றாளர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இந்நிலையில், மோகன் பகவத் அவர்களிடம் 5 கேள்விகளை கேட்கிறேன்.
நாடெங்கிலும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் மூலம் அச்சுறுத்தி மாநில அரசுகளையும் அரசியல் கட்சிகளையும் உடைத்து வரும் மோடியின் செயல் சரியானதா?
மோடி தனது கட்சியில் மோசடி தலைவர்களை இணைத்துள்ளார். இதுபோன்ற அரசியலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
ஆர்எஸ்எஸ்ஸின் கருவறையிலிருந்து பாஜக பிறப்பெடுத்தது. இந்நிலையில், பாஜக தவறிச் செல்லாமல் தடுப்பது ஆர்எஸ்எஸ்-இன் பொறுப்பு. அப்படிருக்கையில், மோடி தவறான செயல்களை செய்யாமல் நீங்கள் என்றாவது தடுத்துள்ளீர்களா?
மக்களவைத் தேர்தலின்போது, ஆர்எஸ்எஸ் தேவையில்லை எனக் கூறியிருந்தார் ஜெ.பி. நட்டா. இதன்மூலம், தாய் நிறுவனம் மீது அதிருப்தியை பாஜக வெளிப்படுத்துகிறது. இப்படி அவர் கூறும்போது உங்களுக்கு வருத்தமளிக்கவில்லையா?
75 வயது நிரம்பியதும் உங்கள் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டுமென ஒரு சட்டம் வகுத்துள்ளீர்கள். ஆனால் இச்சட்டம் மோடிக்கு பொருந்தாதென அமித் ஷா தெரிவிக்கிறார். அத்வானிக்கு பொருந்தும் சட்டம் மோடிக்கு ஏன் பொருந்தாது? எனக் கேட்டுள்ளார் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.