நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

இந்திய இளையோர் காங். தலைவராக உதய் பானு சிப் நியமனம்!

காங்கிரஸ் தலைவராக இருந்த ஸ்ரீநிவாஸ் பி வி-க்கு பதிலாக உதய் பானு சிப் நியமிக்கப்பட்டுள்ளார்.

உதய் பானு ஷிப் எக்ஸ் தளப் பதிவு

Updated On :

இந்திய இளையோர் காங்கிரஸ்(ஐஒய்சி) தலைவராக உதய் பானு சிப் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்திய இளையோர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஸ்ரீநிவாஸ் பி வி-க்கு பதிலாக உதய் பானு சிப் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீநிவாஸ் பி வி தலைமையில், இளையோர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கரோனா பெருந்தொற்று காலத்தில் சமூகத் தொண்டாற்றியதுடன் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய இளையோர் காங்கிரஸ் பொதுச் செயலராக இருந்த உதய் பானு சிப் தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீநிவாஸ் பி வி கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்முவின் பலௌரா பகுதியை சேர்ந்த உதய் பானு சிப் காங்கிரஸ் தலைவர் ஹரி சிங் சிப்பின் மகன் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.