பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்!
பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
பர்விந்தர் அவானா.
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) இளையோர் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக இரண்டு டி20 போட்டிகளிலும், 62 முதல் தரப் போட்டிகளிலும் விளையாடியுள்ள பர்விந்தர் அவானா, 191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மட்டுமல்லாமல், தில்லி, இந்தியா 'ஏ' மற்றும் இந்திய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
ஓய்வுக்குப் பிறகு, அவர் பயிற்சியாளர் பணியில் ஈடுபட்டு, தில்லியின் யு16, யு19 மற்றும் யு23 அணிகளுடனும், இந்தியா யு19 அணிகளுடன் பணியாற்றியுள்ளார்.
இந்தக் குழுவில், கிருஷ்ண தாஸ், ராகேஷ் படேல், அர்ஜுன் யாதவ் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அஸ்ஸாம் மற்றும் கோவா வேகப்பந்து வீச்சாளரான கிருஷ்ண தாஸ், 49 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 166 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் இந்தியா யு19 மற்றும் இந்தியா 'ஏ' அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
ராகேஷ் படேல் குஜராத் மற்றும் பரோடா அணிகளுக்காக விளையாடியதுடன், இந்தியா 'ஏ' அணிக்காகவும், இது தவிர, துலீப் கோப்பை, தியோதர் கோப்பை மற்றும் இரானி கோப்பை ஆகியவற்றிலும் விளையாடியுள்ளார்.
அர்ஜுன் யாதவ் இந்தியா 'ஏ' அணிக்காக 83 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2000-ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
Summary
Former India pacer Parvinder Awana was on Friday appointed chairman of the newly-formed BCCI junior selection committee.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

